ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் உற்பத்தியாகும் நகர திண்மக் கழிவுகளை சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அகற்றுவதற்கான விசேட திட்டத்திற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளது. இதற்கு செலவாகுமென எதிர்பார்க்கப்படும் முழுப் பெறுமதி 10.6 அமெரிக்க மில்லியன் டொலர்களாகும். இவ் முழுத்தொகையும் கொரிய அரசாங்கத்தின் நன்கொடையாக இந்நாட்டிற்கு கிடைக்கப் பெறும். இது தொடர்பிலான உடன்படிக்கையின் பொருத்தானைக்கு கையெழுத்திடுவதற்கு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார அவர்கள், கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் இந்நாட்டிற்கான பணிப்பாளர் திருமதி கிம் யங் ஜின் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் பண்டார அவர்களின் கரங்களினால் இன்று பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது.
இரு வருடங்களாக செய்யப்பட்ட சுற்றாடல் ஆய்வின் பின்னர் இவ் திட்டத்திற்கு தேவையான காணிகள் அடையாளம் காணப்பட்டதுடன், இதன் கீழ் பதுளை மாவட்டத்தில் மீகாகிவுல்ல பிரதேசம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் போம்பேமடு பிரதேசமும் சுகாதாரமான கழிவு களங்கள் இரண்டினை உருவாக்குவதற்காக செயலாற்றப்பட்டுள்ளது. அத்தோடு, இவ் திட்டத்தினூடாக வவுனியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அத்தியாவசியமான திண்ம கழிவகற்றல் முகாமைத்துவத்திற்கு தேவையான அடிக்கட்டுமான வசதிகள் மற்றும் இயந்திரங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மேலதிகமாக இவ் திட்டத்தினூடாக உரிய பிரதேசங்களில் அடிக்கட்டுமான வசதிகளை மேம்படுத்தலும் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக்களை உருவாக்குதலும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களாக உள்ளன. இவ் நிகழ்விற்கு அமைச்சரவையின் உத்தியோகத்தர்களும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர்