நோக்கம்

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அதிகாரப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு பயன் வழங்கக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்காக உள்நாட்டு வெளிநாட்டு நிதிக்கமைய அமைச்சினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் திட்டமிடல் மற்றும் செயற்படுத்துவதன் மூலம் மாகாணங்களுக்கிடையிலான ரண்பாடுகளைக் கட்டுப்படுத்த பங்களிப்புச் செய்தல்.

உபாயத் திட்டங்கள்

  • நாட்டின் மொத்த சமூக பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பங்களிப்புச் செய்வதற்காக அவ்வவ் மாகாணங்களில் காணப்படும் மானிட வளப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தல்.
  • மானிட வள அபிவிருத்தி மற்றும் விஞ்ஞான அடிப்படைக்கமைய உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறன்மிக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
  • மன்ற நிருவாக முறையினை உறுதிப் படுத்தல்.
  • குடியேற்ற விகிதாசாரத்திற்கிணைவாக உயரிய மட்டத்தில் காணப்படும் மாகாணங்களில் அம்மட்டத்தை மட்டுப் படுத்துவதற்ககாக மிகவும் பொருத்தமான கொள்கைகள் மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களை வகுத்தல் உட்பட அறிமுகப்படுத்தல்.
  • அவ்வவ் மாகாணங்களில் காணப்படும் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாடு உறுதிப்படுத்தப் படுவதுடன் அனர்த்த அபாயங்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ளும்
  • செயற்பாடுகளை பிரதேச மட்டத்திலான அபிவிருத்திச் செயற்பாடுகளில் கூட்டிணைத்தல்.
  • கீழ் மட்டத்திலிருந்து சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சமூகப் பங்கேற்பினை விருத்தி செய்வதன் மூலம் மாகாணங்களில் காணப்படும் வளங்களின் நேரடிப் பயன்பாடுகள் மற்றும் கிராமிய சமூகத்தின் பெறுமதி மற்றும் இயலுமைகளை வலுவூட்டல்.
  • நல்லாட்சி மூல அம்சங்களைப் பின்பற்றுவது அவ்வவ் மாகாணங்களில் காணப்படும் மானிட மூலதனம் மற்றும் சூழல் வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி சகல மாகாணங்களுக்கும் வருமானங்களை ஈட்டக்கூடிய இயலுமைகளை விருத்தி செய்தல்.