புறநெகும

நோக்கம் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள் கட்டமைத்தல் மற்றும் பின்னடைந்துள்ள உளளூராட்சி மன்ற நிறுவன 108 அதிகாரப் பிரதேசங்களில் 186 உப செயற்திட்டங்களுக்கமைய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்.
கடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி
செயற்திட்ட காலம் 2011 - 2016
அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மேற்கு, வடமேல், தெற்கு, சப்ரகமுவ, ஊவா, மத்திய, வடமத்தி ஆகிய மாகாணங்கள்

இதற்கு மேலதிகமாக பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகளை மிகுந்த வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன்மிக்க முறையில் மேற்கொள்ளக்கூடியவாறு இந்நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் உட்கட்மைப்பு வசதிகள் முறையின் விருத்திசெய்தல், வரிப்பணம் உட்பட ஏனைய பொது அறவீடுகள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் அவற்றை அங்கீகரிக்கும் முறைகளை மிகுந்த நெகிழ்வுத் தன்மையுடன் மேற்கொள்ளக்கூடியவாறு பிரதேச சபையின் கொள்கைகளை மறுசீரமைப்பதைப் போன்று உள்ளூராட்சி மன்றங்களுக்காக இயந்திர உபகணரங்களை வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

நவகத்தேகம வாராந்த சந்தை
நாவுல பல்செயற்பாட்டுக் கட்டடம்

கொழும்பு பெரும்பாக கழிவுநீர் முகாமைத்துவச் செயற்திட்டம்

நோக்கம் கொழும்பு மாநகர சபையின் கழிவுநீர் அகற்றும் தொகுதியினை நவீனமயப்படுத்துவதன் மூலம் நகரைப்போன்று அதனைச் சூழ வாழும் நகர வாசிகளுக்காக முறையான கழிவுநீர் அகற்றும் முறையினை வழங்குவதன் ஊடாக அவர்களுக்குப் பொருத்தமான சுகாதார வளம்மிக்க சூழலை உருவாக்குதல்.
நிதியத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசு
செயற்திட்ட காலம் 2010 - 2017
அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசம் கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசம்

 

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களில் வாழும் 838,000 மக்களுக்காகப் பொருத்தமான சுகாதார வளம்மிக்க சூழலை உருவாக்குவதன் மூலம் அதிசிறந்த வாழ்க்கை முறையினை வழங்கும்
நோக்குடன் திட்டமிடப்பட்டுள்ள விடயங்கள் இதன்கூலம் கொழும்பு பொரும்பாகப் பிரதேசத்தின் 2.5 மில்லியன் மக்களுக்குப் பயன்கிடைக்கின்றது.

செயற்திட்டத்தை அமுல்படுத்தும் செயற்பாடுகள் கொழும்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுவதுடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு நிருவாகச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. தொழில்நுட்பம், முகாமைத்துவ மற்றும் வசதிகளின் பின்னடைவு பிரச்சினைகளுக்கு முன்னுரிமைத் தொடருக்கமைய முதலீடுகளை மேற்கொள்வதைஅடிப்படையாகக் கொண்டு செயற்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதான செயற்பாடுகள்

 • கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசம், தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர சபை மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகாரப் பிரதேசங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பினை நவீன மயப்படுத்தல்.
 • கொள்ளளவு குறைந்ததாக இனங்காணப்பட்ட கழிவுநீர்த் தொகுதிகளை நவீன மயப்படுத்தல், கழிவு நீரை அழ்கடலுக்கு வெளியிடும் பிரதான குழாய் மார்க்கத்தை நவீன மயப்படுத்தல்.
 • கழிவுத் தொகுதியினை பராமரிக்கத் தேவையான இயந்திர உபகணரங்களை கொழும்பு மாநகர சபை கழிவு நீர் அகற்றும் பிரிவிற்கு வழங்குதல்.
 • கொழும்பு மாநகர சபையின் கழிவுநீர் அகற்றும் பிரிவின் ஊழியர்களை நிறுவன ரீதியில் மற்றும் அவர்களின் இயலுமைகளை விருத்தி செய்தல்.

எதிர்பார்க்கப்படும் பயன்கள்

 • கழிவுநீர் முகாமைத்துவ சபையினை விருத்திசெய்வதன் மூலம் வாழ்வதற்குப் பொருத்தமான நகர சூழலை உருவாக்குதல்.
 • கொழும்பு மாநகர சபையில் மற்றும் சனநெரிசல் கொண்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுகாதார வளம்மிக்க சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த வாழ்க்தைத் தரம் கிடைத்தல்.
 • சமுத்திரம் மற்றும் தரையின் நீரின் தரம் உயருதல்.

கொழும்பு பெரும்பாக நீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்யும் முதலீட்டு வேலைத்திட்டம் - கட்டம் 2

நோக்கம் கொழும்பு மாநகர சபை எல்லைப் பிரதேசத்திற்குள் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான நீர் விநியோகம் உட்பட முறையான கழிவுநீர் அகற்றும் சேவையினை வழங்குதல்.
நிதியத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசாங்கம்.
செயற்திட்ட காலம்

செயற்திட்டம் 2: 2014 - 2019
செயற்திட்டம் 3: 2015 - 2020

அமுல்படுத்தும் பிரதேசம் கொழும்பு மாநாகரசபை அதிகாரப் பிரதேசம்

கொழும்பு மாநகர சபை எல்லைப் பிரதேசத்திற்குள் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான நீர் வழங்கல் மற்றும் முறையான கழிவு நீர் சேவைகளை வழங்க கொழும்பு பெரும்பாக நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்வது முதலீட்டு வேலைத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பல்செயற்பாட்டு அபிவிருத்தி யோசனை வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது அமுலில் உள்ள கொழும்பு கழிவுநீர் அகற்றும் தொகுதியின் புணரமைப்புப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மற்றும் கொழும்பு பிரதேச நீர் மற்றும் கழிவுநீர் வசதிகளை விருத்தி செய்வதற்கு வழங்கும் நிதி ஒதுக்கீடுகள் மூலம் கொழும்பு தெற்கு பிரதேசத்தின் எதிர்கால புதிய அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பொருத்தமானவாறு கழிவு நீர் அகற்றும் தொகுதியினைத் தாபித்தல். தற்போது கழிவு நீர் அகற்றும் வசதிகள் அற்ற பிரதேசங்களுக்காக கழிவு நீர் அகற்றும் தொகுதிகளைத் தாபித்தல் மற்றும் கழிவு நீரை கடலுக்கு அனுப்புவதற்கு முன்னர் சுத்திகரிப்புக்கள் மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அரசு இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியத்திற்கு மேலதிகமாக குறைநிரப்பு நிதியம் ஐரோப்பிய முதலீட்டு வங்கியிலிருந்து (EIB) பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாண வீதி இணைப்புச் செயற்திட்டம் (ஆரம்பம்)

நோக்கம் வடமாகாணத்தில் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாகாணத்திற்கு இணைப்பினை விருத்தி செய்தல் உட்பட வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தைப் பலப்படுத்தல்.
கடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி
செயற்திட்ட காலம்

2010 - 2016

அமுல்படுத்தப்படும் பிரதேசம் வட மாகாணம்

 

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 173 மில்லியன் அ.டொலர் கடனுதவி நாட்டின் வடமாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மற்றும் மாகாண வீதிகளைப் புனரமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் 24.4 மி.அ.டொலர் மாகாண உள்ளீட்டின் கீழ் வட மாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண வீதிகள் 154 கிலோ மீற்றரைப் புனரமைப்பதற்காக மற்றும் வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தைப் பலப்படுத்துவதற்காகவும் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

அமுல்படுத்தும் நிறுவனம்

வட மாகாணத்தின் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம்

பௌதீக முன்னேற்றங்கள்

இச் செயற்திட்டத்தின் மாகாண உள்ளீட்டின் கீழ் வட மாகாணத்தின் வீதி ஒப்பந்தங்கள் 08 மற்றும் கட்டட ஒப்பந்தம் 01 வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் 06 வீதி ஒப்பந்தங்கள் மற்றும் கட்டட ஒப்பந்தங்களின் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சிய 02 வீதிகளின் ஒப்பந்தத்திற்கமைய நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மஹிலங்குளம் - பள்ளமடுவீதி - பாலம் நிர்மானிப்பு உயிலங்குளம் - மானக்குளம் - நனந்தன் வீதி - வாய்க்கால் தொகுதி நிர்மானிப்பு

மடுகந்த ஈரப்பெரியகுளம் வீதி உயிலங்குளம் - மானக்குளம் - நனந்தன் வீதி - வாய்க்கால் தொகுதி நிர்மானிப்பு

வடமாகாண வீதி இணைப்புச் செயற்திட்டம் (மேலதிக ஒதுக்கீடு)

நோக்கம் வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களில் மற்றும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுர மாவட்டத்தில் வீதி வலையமைப்பினை விருத்தி செய்வதன் மூலம் மாகாணத்தின் உள்ளக இணைப்புக்களை விருத்தி செய்தல் மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி நிறுவனத்தைப் பலப்படுத்தல்.
கடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி
செயற்திட்ட காலம்

2013 - 2018

அமுல்படுத்தப்படும் பிரதேசம் வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணம்

 

ஆரம்பச் செயற்திட்டத்தின் வெற்றியினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வட மாகாண வீதி தொடர்பான செயற்திட்டத்திற்கு மேலதிக நிதியாக 68 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி நாட்டின் வடபகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மற்றும் மாகாண வீதியினைப் புணரமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் 30 மில்லியன் அ.டொலர் மாகாண உள்ளீட்டின் கீழ் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண வீதிகள் 125 கி.மீற்றர் புணரமைப்பதற்காக மற்றும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வீதி சார்ந்த நிறுவனத்தினைப் பலப்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அமுல்படுத்தும் நிறுவனம்

வடமாகாணத்தில் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வட மத்திய மாகாணத்தில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை.

பௌதீக முன்னேற்றங்கள்

மேலதிக நிதியின் கீழ் வடமத்திய மாகாணத்தில் 05 வீதி ஒப்பந்தங்களும் வட மாகாணத்தில் 04 வீதி ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில் வடமத்திய மாகாணத்தில் 05 ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், வடமாகாணத்தில் 02 ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் 05 வருட காலங்களுக்காக அவ் வீதிப் பராமரிப்புப் பணிகளுக்கு உரியதாக ஒப்பந்ததாரரினால் தொடர்ந்தும் முன்ணெடுத்துச் செல்லப்படவுள்ளன. வடமாகாணத்தில் எஞ்சிய 02 ஒப்பந்தங்களின் நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கென்னடி வீதி ஒட்டிசுட்டான் - புதுக்குடியிருப்பு மாத்தளன் வீதி

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்புச் செயற்திட்டம்

நோக்கம்
 • யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர் வழங்கல் சேவைகளை விருத்தி செய்தல்.
 • யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பிரதேசத்திற்குள் மக்களுக்காக சுத்திகரிப்பு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் யாழ் குடாநாட்டில் நீர் விநியோக முகாமைத்துவ வேலைத்திட்டங்களைப் பலப்படுத்தல்.
கடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி
செயற்திட்ட காலம்

2012 - 2017

அமுல்படுத்தப்படும் பிரதேசம் கிளிநொச்சி மாவட்டம்

 

இச் செயற்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறாகக் காணப்படுவது வீதியை அகலமாக்கி புணரமைக்கப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கம் மற்றும் இரணைமடு நீர்த் தேக்கத்தின் கீழ் புணரமைக்கப்பட்ட உத்சான நீர்ப்பாசனத் திட்டமாகும்.

இதன்மூலம் 10,000 விவசாயக் குடும்பங்களுக்குப் பயன் கிடைப்பதுடன் 8455 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள முடியும். திருவையாறு உத்சான நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் 447 ஹெக்டேயர் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடிந்த போதிலும் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதி தொடக்கம் இது செயற்படவில்லை. இச்செயற்திட்டத்தின் மூலம் சிறுபோகச் செய்கைகள் மேற்கொள்ளப்படும் வயற்காணியின் அளவு சுமார் 4000 ஏக்கரினால் அதிகரிக்க முடியும் என கணிப்பீடு செய்யப்படுகின்றது.

இடைநிலைச் சுகாதாரத் துறைசார்ந்த அபிவிருத்திச் செயற்திட்டங்கள்

நோக்கம் போசாக்கு மற்றும் தொற்றாத நோய்கள் தொடர்பில் எழக்கூடிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்ளூடியவாறு பொதுச் சுகாதார வசதிகளை மேம்படுத்தல்.
கடனுதவி வழங்கும் நிறுவனம் உலக வங்கி
செயற்திட்ட காலம்

2013 - 2018

அமுல்படுத்தப்படும் பிரதேசம் நாடுபூராகவும்

 

செயற்திட்டப் பணிகள்

 • தொற்றாத நோயினைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்
 • மகப்பேறு மற்றும் சிறுவர் சுகாதாரத்திற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்
 • தொற்றும் நோயினைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்தல்
 • சுகாதார முறைமையினை விருத்தி செய்தல்
 • பயிற்சிச் செயலமர்வு, ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள்

கிராமியப் பாலங்களின் நிர்மாணச் செயற்திட்டம்

நோக்கம்
 • நாட்டின் தேசிய பொருளாதார முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களின் செயற்பாடுகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் பண்புசார் தரத்தை விருத்தி செய்தல்.
 • கிராமிய மக்களின் பொதுப் பாதுகாப்பினை விருத்தி செய்தல்
 • கிராமியப் பிரதேசங்களில் இதுவரையில் பயன்படுத்தப்படாத வளங்களை உயர்ந்த பட்சம் பயன்படுத்துவதைப் போன்று கிராமிய சமூகத்தின் வாழ்க்கை நிலைமையினை விருத்தி செய்வதனை நோக்காகக் கொண்டு புதிய உற்பத்திச் சந்தர்ப்பங்களுக்காக அவர்களின் சுதேச அறிவினைப் பயன்படுத்தல்.
கடனுதவி வழங்கும் நிறுவனம்
 • கட்டம் I - ஐக்கிய இராட்சியம்
 • கட்டம் II - ஐக்கிய இராட்சியம்
 • கட்டம் III - நெதர்லாந்து
செயற்திட்ட காலம்

 

 • கட்டம் I  : 2013 - 2015
 • கட்டம் II : 2014 - 2017
 • கட்டம் III: 2014 - 2017

 

அமுல்படுத்தப்படும் பிரதேசம் நாடுபூராகவும்

 

இச் செயற்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இரண்டாவது கட்டத்தின் கீழ் உரிய பணிகள் பூர்த்தி செய்யப்படாத பாலங்களின் எண்ணிக்கை 329 ஆகும். மூன்றாவது கட்டத்தின் கீழ் நிர்மானப் பணிகள் பூர்த்தி செய்யாத 353 பாலங்களின் நிர்மாள பணிகள் இடம்பெறுகின்றன.

முன்னர் பின்னர்
குறகம்மன காப்பொலகம பாலம் - மொனராகலை - பிபிலை


முன்னர்

பின்னர்
ஹந்துகல ஜபறகட்டிய பாலம்

வடகிழக்கு உள்ளூராட்சி மன்ற சேவைகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் (NELSIP)

நோக்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்ததாக அமைந்துள்ள ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்குச் சுயமான சேவைகள் மற்றும் பிரதேச உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுப்புடன் மற்றும் அற்பணிப்புடன் மக்களுக்கு வழங்குவதற்காக ஒத்துழைப்புக்களை வழங்குதல்.
கடனுதவி வழங்கும் நிறுவனம் உலக வங்கி, அவுஸ்திரேலியா குடியரசு மற்றும் இலங்கை அரசாங்கம்
செயற்திட்ட காலம் 2012 - 2017
அமுல்படுத்தப்படும் பிரதேசம்
 • வடக்கு கிழக்கிலுள்ள சகல உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 79
 • வட மத்திய மாகாணத்தின் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 12
 • ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 03
 • வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 07

 

பிரதான உள்ளீடுகள்

உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் பண்புசார் தரத்தினை மேம்படுத்தல்.

பொறுப்புக்களை நிறுவனங்களுக்கு வழங்குதல்

உள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படும் சேவைகளின் அளவு மற்றும் பண்புசார் தரத்தை விருத்தி செய்தல்.

இயவளவு விருத்தி

பிரதேச சேவை வழங்கலை வலுப்படுத்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள சேவைகளை வழங்குவதற்காக அந்நிறுவனங்களின் இயலுமைகளைக் கட்டியெழுப்புதல் மற்றும் அதற்காக மாகாண மற்றும் தேசிய மட்டத்தின் நிறுவனங்களின் மேற்பார்வைக் சியளவினைப் பலப்படுத்தல்.

மதிப்பீடு மற்றும் மேற்பார்வைச் செயற்பாடுகள்

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்குரியதான உற்பத்தித்திறன் கொள்ளளவினை வகுப்பதற்கான இயலுமைகளை விருத்தி செய்யும் நோக்குடன் பல்வேறுபட்ட பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைச் செயற்பாடுகள்.

செயற்திட்டத்தின் முகாமைத்துவம்

செயற்திட்டத்தின் வினைத்திறன்மிக்க செயற்பாடுகளுக்காக செயற்திட்டத்தின் நாளாந்த முகாமைத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் மாகாண நிறுவனங்களுக்குத் தேவையான ஆலோசனை சேவைகள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக உதவுதல்.

புத்தள பொது நூலக நிர்மாணிப்பு - ரூபா. 1.4  மில்.
நெடுந்தீவிற்காக பயணிகள் போக்குவரத்து படகு நிர்மாணிப்பு - ரூபா. 150 மில்.


அனுராதபுரம் நாகசேனை மாவத்தை
கால்வாய்த் தொகுதி நிர்மானிப்பு -
ரூபா. 39.95 மில்.

அம்பாரை பஸ் தரிப்பு நிலைய நிர்மானிப்பு - ரூபா. 280.0 மில்.

அறிவினைக் கேந்திரமாகக் கொண்ட பாடசாலைக் கல்வி முறைமையினை விருத்தி செய்யும் செயற்திட்டங்கள்

நோக்கம் அறிவினைக் கேந்திரமாக கொண்ட பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்ட ஆரம்ப மற்றும் இடைநிலைக்கல்வி தொடர்பிலான பிரவேசங்களும் அதன் பண்புசார் விருத்தியும்
கடனுதவி வழங்கும் நிறுவனம் உலக வங்கி
செயற்திட்ட காலம் 2012 - 2017
அமுல்படுத்தப்படும் பிரதேசம் நாடுபூராகவும்

கல்வி என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தியின் பிரதான அடிப்படையாகும். நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை எட்ட முடிவது கல்வியின் மூலமாகும். எனவே இச் செயற்திட்டத்தின் மூலம் குடிமக்களை அறிவு கொண்டோராக வலுவூட்டுவதற்காக வசதிகள் வழங்கப்படுகின்றன. பாடசாலலையை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் அபிவிருத்தி, இரட்டை மொழிக் கல்வியினை மேம்படுத்தல், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் பாடசாலை முகாமைத்துவக் குழுவை சகல பாடசாலைகளிலும் உருவாக்குதல், நாட்டின் கல்வியினை அபிவிருத்தி செய்தல் மற்றும் கல்வி முகாமைத்துவத்தைப் பலப்படுத்தலும் இச்செயற்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.


மனைப் பொருளியல் பிரிவு
ஈரியகொல்ல மகா வித்தியாலயம் - யக்வில - வடமேல் மாகாணம்

நுவரெலியா கோட்டக் கல்வி
அலுவலகம் - மத்திய மாகாணம்

இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்திச் செயற்திட்டம்

நோக்கம் நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சூழல் முகாமைத்துவத்திற்காக விருத்தி செய்தல் நீர் மற்றும் நிலத்தின் உற்பத்தித்திறனை நிலையாக விருத்தி செய்தல்.
கடனுதவி வழங்கும் நிறுவனம் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD)
செயற்திட்ட காலம் 2012 - 2017
அமுல்படுத்தப்படும் பிரதேசம் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டம் (நீர்ப்பாசன கிலோ மீற்றர் 390)

 

செயற்திட்டத்தின் செயற்பாடுகள்

 • உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி
  • உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி
  • ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி
 • உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் செயற்பாட்டு ஊக்குவிப்பு
 • செயற்திட்ட முகாமைத்துவம்
before pro 1
முன்னர்

பின்னர்

முன்னர்

பின்னர்

அபிவிருத்தி அடைந்துவரும் பிரதேசங்களின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் (RIDP)

நோக்கம் வடக்கு, கிழக்கு, வடமத்தி மற்றும் ஊவா மாகாணங்களில் கிராமிய வீதிகள், மத்திய மற்றும் சிறியளவு நீர்ப்பாசனம் உட்பட குடிநீர் வழங்கல் வசதிகள் போன்ற அடிப்படை உட்கட்மைப்பு வசதிகள் மூலம் இம்மாகாணங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் மற்றும் அதன்மூலம் கிராமிய பொருளாதார அபிவிருத்திக்காகப் பங்களிப்பு உட்பட பிரதேச முறன்பாடுகளை மட்டுப்படுத்தல்.
கடனுதவி வழங்கும் நிறுவனம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் (JICA)
செயற்திட்ட காலம் 2017 ஏப்ரல் - 2021  ஜுலை
அமுல்படுத்தப்படும் பிரதேசம் வடக்கு, கிழக்கு, வடமத்தி மற்றும் ஊவா மாகாணம்

செயற்திட்டச் செயற்பாடுகள்

 • உப மொத்தம் - 524
 • கிராமிய வீதி புணரமைப்பு - 275
 • நீர்ப்பாசன வசதி நிர்மானிப்பு மற்றும் மறுசீரமைப்பு - 151
 • குடிநீர் வழங்கல் - 98

2016 செயற்திட்டங்கள்

 • உரிய விடயங்களை இனங்காணும் தூதுக்குழுவினர் 2014 செப்ரெம்பர் மாதத்தில் சமூகமளித்தல் மற்றும் இதன் அறிக்கை சகல தரப்பினரினாலும் ஒப்பமிடல்.
 • கடன் அங்கீகரிக்கும் தூதுக்குழுவினர் டிசம்பர் மாதத்தில் வருகை தரவுள்ளனர்
 • 2017 ஏப்ரல் தொடக்கம் 2017 செப்ரெம்பர் வரை பெறுகைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 • சிவில் பணிகளை ஆரம்பிப்பதற்கான இறுதித் திகதி - 2017 ஒக்டோபர்

அவசர அனர்த்த பொறுப்பு வலையமைப்பு மேம்படுத்தல் திட்டம் - கட்டம் III

நோக்கம் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு விருத்தி செய்யப்பட்ட தீயணைக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பீடுகளை மட்டுப்படுத்தி பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.
பிரதான உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகள் நிறுவனங்களுக்காக தீயணைக்கும் இயந்திர உபகணரங்கள் மற்றும் அம்பியுலன்ஸ் வண்டிகளை வழங்குதல்
அமுல்படுத்தும் பிரதேசம் கொழும்பு மாநகர சபை, மாத்தளை மாநகர சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை, அம்பாரை நகர சபை, வவுனியா நகர சபை
நிதியத்தின் மூலம் நெதர்லாந்து கடன் நிதியம்

தீயணைக்கும் பிரிவினைத் தாபித்தல்

நெதர்லாந்து கடன் நிதியத்திற்கமைய அமுல்படுத்தி பூர்த்தி செய்யப்பட்டுள்ள திடீர் அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வலையமைப்பினை விருத்தி செய்யும் செயற்திட்டம் கட்டம் I மற்றும் II இன் கீழ் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கு மேலதிமாக 2016 ஆம் ஆண்டிற்குள் மாத்தளை மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு தீயணைக்கும் இயந்திர உபகரணங்கள் வழங்குதல், கொழும்பு, மாத்தளை, யாழ்ப்பாணம் ஆகிய மாநகர சபைகளுக்கு மற்றும் வவுனியா / அம்பாறை நகர சபைகளுக்கும் அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்குதல். தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தீயணைக்கும் வண்டி மற்றும் அம்பியுலன்ஸ் வண்யினை வழங்குவதனை குறித்துக் காட்டும் வகையில் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதியினால் அதன் திறப்பினைக் கையளிக்கும் நிகழ்வு 2016 ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.