இருபத்தி நான்கு வருட நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை உள்ளூராட்சி நிறுவகமானது உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கும் ஒரேயொரு நிறுவனமாகும் என அதன் செயற்குழுவின் பிரதி அமைச்சரான ருவன் செனரத் அவர்கள் தெரிவித்தார். நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்கும் உள்ளூராட்சி அமைப்பு மிகவும் முறையான மற்றும் ஒழுங்கான முறையில் ஒழுங்கமைக்கப்படுவதன் மூலம் மிகவும் தரமான பிரதிபலனை பெற முடியும், மேலும் கிராமத்தையும் நகரத்தையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு செயல்முறையை உருவாக்க எதிர்பார்க்கபடுவதுடன் அதற்கான வேலைத்திட்டங்களை ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான பல பணிகள் இந்த நிறுவனத்தின் ஊடாக நடைபெற்று வருவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நிதி முறைகேடுகள் காரணமாக கட்டி முடிக்கப்படாத இலங்கை உள்ளூராட்சி நிறுவகத்தின் எட்டு மாடி கட்டிடத்தை பார்வையிட்டு கட்டிட நிர்மாணங்கள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
இதன்போது, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர்களான மஹேஷிகா கொடிப்பிலியாராச்சி, நிஷாந்த கருணாதிலக, எச்.எம்.எம். ஜே. எம். ஹேரத், மாகாண ஆளுகைக்கான இலங்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சுரதிஸ்ஸ திஸாநாயக்க மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்