மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சராக அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ருவன் செனரத் இன்று (28.11.2024) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கெளரவ அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன முன்னிலையில் அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
தனது கடமைகளை ஆரம்பித்து வைத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளிடம் உரையாற்றிய பிரதியமைச்சர், இந்த நிறுவனங்களில் மாற்றங்களை அறிமுகப்படுத்தி, பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளை மக்களுக்கு மிகவும் இணக்கமான முறையில் வழங்க வேண்டுமென குறிப்பிட்டார். மேலும் இந்நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பிரபாத் பின்னவல, அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.அலோக பண்டார மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.