இரத்தினபுரி நகர சபையை சுற்றுலா கவர்ச்சி உடைய நகரமாக மாற்றியமைப்பதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை பற்றி கலந்துரையாடல் ஒன்றினை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புர அவர்களின் தலைமையின் கீழ் 2024.02.07 ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றுள்ளது.

இவ்வேளை இரத்தினபுரி நந்தா எல்லாவெல அவர்களின் உருவச்சிலைக்கு அருகாமையிலுள்ள பூங்கா, மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள சிறுவர் பூங்கா, மேலும் இரத்தினபுரி சப்பிரகமுவ மஹா சமன் தேவாலயத்திற்கு அருகில் தற்போதும் இயங்கி வரும் போக்குவரத்து துறைசார் பிரிவினையும் புதுப்பித்தமைத்தல் உட்பட நவீன துப்பரவேற்பாட்டு கட்டமைப்பினையும் கட்டப்படுதல் மற்றும் தற்போது இலங்கையிலுள்ள பிரசித்திப் பெற்ற முதன்மை பூங்காவாக இந் நகரத்தினுள் விளங்கும் பொம்பகேலே பூங்காவிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வைப்பது தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இவ்வேளை இடம்பெற்ற கலந்துரையாடலில் சப்பிரகமுவ மாகாண சபையின் பிரதம செயலாளர் உட்பட உத்தியோகத்தர்களும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. நிஷாந்த கருணாதிலக்க அவர்களும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் உட்பட ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்துக் கொண்டனர்.

 

DSC 0401JPG    DSC 0401JPG   DSC 0401JPG 
         
DSC 0401JPG    DSC 0401JPG