மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார கட்டமைப்பினை கட்டமைக்கும் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் ரூபா மில்லியன் 45 க்குரிய செலவில் கட்டமைப்பதற்கு உத்தேசித்துள்ள கலவான ஆதார வைத்தியசாலையின், வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருத்துவ சிகிச்சைப் பிரிவிற்குரிய கட்டிடமும் அமைப்பதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புர அவர்களின் தலைமையில் 2024.01.19 ஆம் திகதி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
மேலும் அந் நிகழ்வின் போது சப்பிரகமுவ மாகாண சபையின் முன்னாள் கௌரவ அமைச்சர் மற்றும் கலவான பிரதேச சபையின் கௌரவ முன்னாள் பிரதேச சபை தலைவர் உட்பட உப தலைவர்கள் அத்துடன் சப்பிரகமுவ மாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.