பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ஜப்பானின் கவாகுச்சி (kawaguchi) என்ற உள்ளூராட்சி நிறுவனத்தினால் ஜப்பானின் செய் நெட் (sai net) ஏஜன்சி மூலமாக 21,973 000 ரூபா பெறுமதியான நோயாளர் ஊர்தி (அம்பியூலன்ஸ்) தெஹிஅத்தகண்டிய வைத்தியசாலைக்கு வழங்கும் நிகழ்வானது இவ் அமைச்சின் செயலாளர் திரு நீல் பண்டார ஹபுஹின்ன அவர்களின் தலைமையில் மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வை பிரதிநிதித்துவப்படுத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் திரு எம்.எம். நயிமுத்தீன் மேலதிக செயலாளர் திரு ஈ.எஸ்.ஜி எதிரிசிங்க உட்பட அமைச்சின் அதிகாரிகள் குழு மற்றும் டாக்டர் திரு ஜயசுந்தர பண்டார (திட்ட பணிப்பாளர் ஆசிய அபிவிருத்தி வங்கி), ஜப்பானின் கவாகுச்சி (kawaguchi) நிறுவனம் மற்றும் சாய் நெட் (sai net) நிறுவனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு மற்றும் தெஹிஅத்தகண்டிய வைத்தியசாலையின் டாக்டர் திரு பி.பி. விஜேசிங்க உட்பட பணியாளர்கள் குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.

DSC 0324JPG   DSC 0330JPG   DSC 0318JPG
         
DSC 0401JPG   DSC 0365JPG   DSC 0416JPG