மாண்புமிகு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் கருத்தின்படி ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்தில் உள்ள பிரதான நகரத்தினையும் மா நகர சபையாக தரமுயர்த்தி அபிவிருத்தி செய்வதற்காக 7 மாவட்டங்களில் உள்ள 07 பிரதான நகரங்களையும் மா நகர சபைகளாக தரமுயர்த்துவதற்கான முதற்கட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை போன்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான முதலாவது வர்த்தமானி அறிவித்தலின் படி ஏற்கனவே தரமுயர்த்தப்பட்டுள்ள 07 நகர சபைகளையும் மா நகர சபைகளாக தரமுயர்த்துவதுடன் அதற்கமைய அம்பாறை, மன்னார் ஆகியனவும் உட்பட இந்த 07 நகர சபைகளை மா நகர சபைகளாக அமைப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான மாண்புமிகு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு பிரதமர் மற்றும் பொது நிருவாக அமைச்சின் அமைச்சரான தினேஷ் குணவர்தன அவர்களால் வெளியிடப்பட்ட 2296/05 மற்றும் 2296/37 ஆகிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களின் கீழ் மா நகர சபைகளாக தரமுயர்த்தப்பட்ட 07 உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது 05 மா நகர சபைகள் தரமுயர்த்தி உருவாக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள நகர சபைகளான மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் விரைவில் வெளியிடப்படவுள்ளது.