மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் முலம் செயற்படுத்தப்பட்டு வரும் கிராமிய பாலங்கள் நிர்மாணித்தல் செயற்றிட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் செயற்பட்டு வரும் கலவான பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படும் வத்துராவ மற்றும் ஹகரங்கல நகரங்களை இணைக்கும் பாலத்தின் வேலைகளை ஆரம்பித்து வைப்பதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புர அவர்களின் தலைமையின் கீழ் 2024.01.19 ஆம திகதி சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து கடன் உதவியின் கீழ் செயற்படுத்தப்பட்டு வரும் முன் இணைப்பு பாலம் தொடர்பான திட்டம் மூலம் இப்பாலம் நிர்மாணிக்கப்படும். இதற்கு முன்னர் இருந்த பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக நீளத்தில் 30 மீற்றர் உடையதும் அகலத்தில் 5.5 மீற்றர் கொண்டதுமான இப்பாலம் தொடர்பாக மதிப்பிடப்பட்டுள்ள செலவானது மில்லியன் 100 ஆகும். இதன் மூலம் 1000 த்திற்கும் மேற்பட்டவர்கள் நன்மையடைவர்.

இவ்வேளையில் கலவான பிரதேச சபையின் முன்னாள் கௌரவ தலைவர் மற்றும் உப தலைவர் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் கிராமிய பாலங்கள் செயற்றிட்டத்தின் மாகாண பொறியியலாளரும் கலந்துக் கொண்டனர்.

 

DSC 0401JPG    DSC 0401JPG   DSC 0401JPG 
         
DSC 0401JPG    DSC 0401JPG