மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் வழங்கல்கள் அந்நிறுவனத்தினால் பயன்படுத்தப்படும் முறைகள் தொடர்பில் தொடர்ச்சியான மதிப்பீடுகளை மேற்கொள்வது இவ் ஆய்வுப் பிரிவின் பிரதான பணிகளாகும். இப்பணிகளுக்காக மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வழங்கல்கள், மாகாண சபை மதிப்பீடு, உண்மையான வருமானம் உட்பட செலவினங்கள் தொடர்பான தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகவல்கள் ஆய்வுப் பிரிவின் மூலம் எழும் தழம்பல்கள் மற்றும் பிரச்சினைகள் மாகாண நிதி முகாமைத்துவத்தினால் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இதன் மூலம் தமது நிதிச் செயற்பாடுகளின் எதிர்கால இலக்கினை நோக்கி மாகாண சபைகளை ஈடுபடுத்துவது நோக்கமாகும்.

2016 ஆம் ஆண்டின் செயற்பாடுகள் (2016.12.31 ஆம் திகதியன்று முன்னேற்றம்)

  • 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசினால் வழங்கப்படும் வழங்கல்கள் மற்றும் மாகாண சபை வருமான மதிப்பீட்டுச் செலவின எல்லைகளுக்குட்பட்டு அந்நிறுவனங்களினால் செலவினங்கள் மேற்கொள்ளப்படும் முறைகள் தொடர்பில் தொடர்ச்சியான மதிப்பீடுகளை மேற்கொள்ளப்பட்டதுடன் 2016.12.31 ஆம் திகதியன்று மாகாண சபைகளில் 2016 நவம்பர் மாதம் வரையான நிதிச் செயற்சாதனைகளின் அடைவுகள் தொடர்பான மாதாந்த அறிக்கை மற்றும் 2016 முதலாவது, இரண்டாவது, மூன்றாவது காலாண்டுக்குரியதாக காலாண்டு அறிக்கைகளும் தயாரித்து பூர்த்தி செய்யப்பட்டன.
  • 2016 முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டு அறிக்கைகளை சகல மாகாண சபைகள், பொதுத்திறைசேரி, குடிசன புள்ளிவிபரவியல் திணைக்களம், இலங்கை மத்திய வங்கிக்கு அவர்களின் சமகால அறிக்கைகளை வெளியிடுவதற்காகவும் அத்துடன் அத்தகவல்கள் எதிர்பார்க்கப்பட்ட ஏனைய நிறுவனங்களுக்கும் தேவையான செயற்பாடுகளுக்காக வெளியிடப்பட்டுள்ளன.
  • மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் ஊழியர் எண்ணிக்கை தொடர்பில் பேணப்படும் புள்ளி விபர அடிப்படை 2016.12.31 ஆம் திகதியன்று சமகாலப்படுத்தல்.
  • உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களின் வருமானம் மற்றும் செலவினங்கள் தொடர்பிலான தகவல்களைக் கொண்ட புள்ளி விபரத் தொகுதியினை 2016 ஆம் ஆண்டில் 2015 ஆம் ஆண்டிற்குரியதாக சமகாலப்படுத்தப்படுவதுடன் இத்தகவல்கள் பகுப்பாய்விற்குட்படுத்தப் பட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் நிதிச் செயற்சாதனைகள் தொடர்பிலான அறிக்கைகளைத் தயாரித்து சகல உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களான மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பொது வசதிகள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து அத்தகவல்களை உரிய அறிக்கையில் உள்ளடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
  • இவ் அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்படும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் மிகைப்பற்று மேன்முறையீடுகளை கருத்தில் கொள்வது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளது இப்பிரிவினால் முன்னெடுக்கப்படும் மற்றுமொரு பணியாகும். 2016.12.31 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கப்படுள்ள மிகைப்பற்று மேன்முறையீட்டினை கருத்திற் கொள்வது தொடர்பில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • இவ் அமைச்சின் செயற்பாட்டின் கீழ் அமுல்படுத்தப்படும் வெளிநாட்டு உதவிச் செயற்திட்டங்களின் நிதிச் செயற்சாதனைகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை மாதாந்தம் பெற்று அத்தகவல்கள் மாகாண சபை நிதிச் செயற்சாதனை அறிக்கையில் உள்ளடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • மாகாண சபைகளின் நிதிச் செயற்பாடுகளை ஆய்விற்குட்படுத்தும் நோக்குடன் கணக்காய்வுகளுக்குப் பதிவுகளை வழங்குதல், வங்கி இணக்கக்கூற்றுக்களைத் தயாரித்தல், முற்பணக் கணக்குகளை ஒப்பீடு செய்தல், கட்டுநிதிக் கணக்குகளை ஒப்பீடு செய்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்பில் விசேடமாக தயாரித்து அனுப்பப்படும் மாதிரிப் படிவத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டில் காலாண்டு அடிப்படையில் (முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுக்காக) தகவல்களை மாகாண சபைகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. அத்தகவல்களைப் பயன்படுத்தி உரிய பணிகளின் முன்னேற்றங்களை ஆராய்தல் மற்றும் அப்பணிகள் தொடர்பில் காணப்படும் தாமதங்கள் அல்லது பிரச்சினைக்குரிய நிலைமைகளை மாகாண நிதி முகாமைத்துவத்தின் கவனத்திற்குட்படுத்தப்பட்டுள்ளது.
  • மாதாந்த மாகாண சபைகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தகவல்களுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ள 2014, 2015 ஆம் ஆண்டுகளுக்கு மற்றும் 2016 நவம்பர் மாதம் வரை உரிய நிதியினை விடுவித்தல், வருமானம் மற்றும் செலவினங்கள் தொடர்பிலான அறிக்கைகள் உட்பட உள்ளூராட்சி மன்றங்களினால் வருடாந்தம் பெற்றுக் கொள்ளும் வருமானம் மற்றும் செலவினங்கள் தொடர்பிலான தகவல்களுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையினை இத்தால் இணைத்து சமர்ப்பிக்கிறேன்.