நோக்கம்

அமைச்சின் மானிட வளத்தை வினைத்திறன் மற்றும் உற்பத்தித் திறனுடன் பயன்படுத்தி அமைச்சின் இலக்கை எட்டுவதற்காக மானிட வள முகாமைத்துவம் மற்றும் அலுவலக வசதிகளை வழங்குதல்.

பிரதான பணிகள்

  • மானிட வள வழங்கல் மற்றும் முன்னெடுத்தல்.
  • அலுவலக இடவசதிகளை வழங்குதல்.
  • போக்குவரத்து வசதிகளை வழங்குதல்.
  • நீர், மின்சாரம், தொலைபேசி, இணையத்தள வசதிகளை வழங்குதல்.
  • ஆவணங்களை விநியோகிக்கும் பணிகள்
  • பராமரிப்புப் பணிகள்
  • விசேட ஞாபகார்த்த விழாக்களை ஒழுங்கு செய்தல்.

அமைச்சின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையான சகல ஊழியர் சபையின் மானிட விருத்திக்காகத் தேவையான அறிவு, திறமை, சிந்தனை விருத்திக்காகத் தேவையான பயிற்சி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல் மற்றும் நடாத்துதல்.

சாதனைகள்

அமைச்சின் ஊழியர்களின் ஸ்தாபன விடயங்கள் மற்றும் ஒழுங்குமுறைச் செயற்பாடுகளைச் செய்தல். அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை பராமரித்தல், தேவையான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் அமைச்சில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல். FR 71 இன் கீழ் பதவிகளுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் PA சுற்றறிக்கை o6/2006 இன் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை உருவாக்குதல். மாண்புமிகு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் அலுவலகம் தொடர்பான கடமைகளை நிறைவேற்றுதல். தினசரி வரும் அஞ்சல்களை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு திருப்பி அனுப்புதல் மற்றும் வெளிக்கள கடிதங்களை அனுப்புதல். அமைச்சின் நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்வது (நாளாந்த வரவு, விடுமுறை, புகையிரத பருவ சீட்டுக்கள் மற்றும் பயணச் சீட்டுக்கள், தண்ணீர், மின்சாரம், பாதுகாப்பு, சேவைகள் மற்றும் துப்புரவு ஏற்பாடு சம்பந்தப்பட்ட சேவைகள், செய்தித் தாள்கள் விநியோகித்தல், அதிகாரப்பூர்வ பதவி அடையாள அட்டைகளை விநியோகித்தல்). அமைச்சின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பாவனைக்கு உதவாத கழிக்கப்பட்ட வாகனங்களை அகற்றுதல் மற்றும் புதிய வாகனங்களை கொள்வனவு செய்தல். கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களை பராமரித்தல். முற்பணம் மற்றும் உரிய அனைத்து வகையான கடன்களையும் வழங்குதல் மற்றும் அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தை நிர்வகித்தல். பாராளுமன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தயாரித்தல், அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பித்தல் மற்றும் பாராளுமன்ற ஆலோசனைக் குழு மற்றும் பாராளுமன்ற ஆலோசனைக் குழு தொடர்பான விடயங்களைச் செய்தல். உற்பத்தித் திறன் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் விசேடமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் மற்றும் ஒழுங்கமைத்தல். கண்டலம (தம்புள்ளை) என்ற இடத்தில் உள்ள சுற்றுலா விடுதியை பராமரித்தல். மேலும் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் C-51 உத்தியோகபூர்வ இல்லத்தையும் பராமரித்தல்.

கண்டலம (தம்புள்ளை) என்ற இடத்தில் உள்ள சுற்றுலா விடுதி

* முன் ஏற்பாடாகவே விண்ணப்பித்தவர்களுக்கு கண்டலம என்ற இடத்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கும் வசதியினை செய்துக் கொடுத்தல்.