சட்டத்தின்மூலம் அனுமதியளிக்கப்பட்டுள்ள சேவைகளை வழங்குதல் உள்ளூராட்சி நிறுவனங்களின் பொறுப்பாகும். குறித்த பிரதேசங்களின் மக்களின் வசதிகள், நலனோம்புகை மற்றும் நல்வாழ்வு என்பவற்றுக்காக சேவைகளை வழங்க வேண்டியது அவசியமாகும்.

உள்ளூராட்சி நிறுவனம் பின்வரும் சேவைகளை நடைமுறைப்படுத்துகிறது,

  • நிர்வாக மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தும் சேவைகள்
  • பொது சுகாதாரம் மற்றும் துப்புரவேற்பாட்டு மேம்பாடு
  • சூழலியல் பாதுகாப்பு
  • பொது பாதைகள் தெருக்கள் மற்றும் பொது வழங்கல் சேவைகளைப் பேணுதல்.

இலங்கையில் உள்ளூராட்சி மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக நீண்ட வரலாறு ஒன்றுண்டு. 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் உள்ளூராட்சி செயற்பாடுகள் மாகாண சபையின் கீழ் ஒப்படைக்கப்பட்டன. இதன் பிரகாரம் உள்ளூராட்சி நிறுவனங்களின் நடவடிக்கைகளின் நிர்வாகமும் மேற்பார்வையும் மத்திய அரசிடமிருந்து மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. எவ்வாறாயினும் உள்ளூராட்சியுடன் தொடர்புடைய கட்டமைப்புகளையும் தேசிய கொள்கைகளையும் தயாரிக்கும் அதிகாரம் மத்திய அரசின் கீழ் தக்கவைத்துக் கொள்ளப்பட்டது.

மாநகரசபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளடங்கிய உளளூராட்சி நிறுவன கட்டமைப்பு 3 சட்ட தயாரிப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.

  • மாநகர சபை கட்டளைச் சட்டம் (1947)
  • நகர சபை கட்டளைச் சட்டம் (1939)
  • பிரதேச சபை கட்டளைச் சட்டம் (1987)

உள்ளூராட்சி நிறுவனங்களைத் தயாரித்தல் (மேலதிக விபரங்களுக்கு இங்கு கிளக் செய்க)

உள்ளூராட்சி தொடர்பான தேசிய கொள்கை - 2012 - 2014ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு நடவடிக்கை (மேலதிக விபரங்களுக்கு இங்கு கிளக் செய்க)