பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதான பொறுப்பான மாநகரசபை திடக்கழிவு முகாமைத்துவத்தின் துறைசார் மற்றும் உபபிரிவு கொள்கைகளை தயாரித்தல், தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்குதல், அனைத்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை உள்ளடக்கிய மனித, நிதி மற்றும் தொழில்நுட்ப வளங்களை திரட்டுதல் மற்றும் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை, செயல்திறன், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டின் பங்கை நிறைவேற்றுவதற்காக, அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திடக்கழிவு மேலாண்மை மையம், சுற்றுச்சூழல் நிலைத்தன்னமயை உறுதி செய்யும் சுற்றுப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு ஆறுகள், ஒடைகள் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் மண்டலங்களை உருவாக்குவதற்கு கழிவுகளை ஆற்றலாக மாற்றவும் ஏராளமான திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த, கழிவு மேலாண்மையில் பயன்படுத்தப்படும் எரிசக்தி ஆதாரங்களாக மாற்றப்படும் திட்டங்களை ஊக்குவிக்கவும், முறைசாராடுறையில் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் மக்காத கழிவுகளின் அளவைக் குறைக்கவும், குப்பை மலைகளை உருவாக்குவதை முடிந்தவரை தடுப்பதன் மூலம் 3R கருத்தை பிரபலப்படுத்துவதற்கான திட்டங்களை ஊக்குவிக்கவும் செயல்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
]அதன்படி அடுத்த 03 ஆண்டுகளுக்குள் சுகாதாரக் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை 30% ஆல் குறைக்கும் நோக்கில், கழிவு மேலாண்மையில் உள்ளூராட்சி நிறுவனங்களை அதிகாரம் அளிக்கும்; CLEAN SRI LANKA திட்டத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது மேலும் அதிக அளவு மக்காத கழிவுகளை உருவாக்கும் ஒன்பது மாகாணங்களின் ஒவ்வொன்றிலும் 06 இடங்கள் என நாடு முழுவதும் 54 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய “பொருள் மீட்பு மையங்கள்” (MRF) கட்டுமானம் மற்றும் தற்போதுள்ள “ பொருள் மீட்பு மையங்களை” மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக இந்த ஆண்டு ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 2026 ஆம் ஆண்டுல் ரூ.700 மில்லியன் மற்றும் 2027 ஆம் ஆண்டுல் ரூ 900 மில்லியன் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் கூரையில் நிறுவப்பட்ட சூரிய மின்கலங்கள் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியும் இந்த “ பொருள் மீட்பு மையம்” திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை,அனுராதபுரம் மாவட்டத்தில் தலாவ மற்றும் குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல ஆகிய இடங்களில் 04 புதிய “பொருள் மீட்பு மையங்கள்” கட்டப்படும் முதல் கட்டமாக காத்தான்குடி பகுதியில் கட்டப்படவுள்ள “பொருள் மீட்பு மையத்திற்கான” அடிக்கல் நாட்டும் விழா நேற்று (23) ஆம் திகதி மாகாண சபைகள் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோரின் தலைமையில் காத்தான்குடி பகுதியில் உள்ள ஜஹா மரைன் விருந்து மண்டபத்தில் (Zaha Marine Banquet Hall) மற்றும் காத்தான்குடி நகர சபையால் பராமரிக்கப்படும் கழிவு மேலாண்மை வளாகத்தில் நடைப்பெற்றது.
பிரதி அமைச்சர் தனது கருத்துக்களை தெரிவிக்கையில்,
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உழைக்கும் மக்களின் கட்சி நிறத்தைப் பார்ப்பதில்லை, உழைக்கும் நபர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஆதரிக்கிறது அப்படிப் பார்த்திருந்தால் முதலில் காத்தான்குடியில் பணிகள் தொடங்கியிருக்காது. எங்கள் மாவட்டத்தில் எனது கட்சி முதலில் வெற்றி பெற்ற திஸ்ஸமஹாராம பிரதேச சபையில் திட்டம் முதலில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் முன்பு உள்ள அரசாங்கங்கள் கடந்த ஆண்டு செப்தெம்பரில் 21 ஆம் திகதி நீங்கள் செய்த மாற்றம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியது”
மேலும் கருத்து தெரிவிக்கையில் “ இந்த மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள்இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள், தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தழிழ் இனத்தவர், இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தவிசாளர் சிங்கள இனத்தவர், அந்த ஒற்றுi மநல்லதல்லவா? இந்த சிங்கள, தழிழ், முஸ்லிம் இனத்தவர்கள் ஒற்றுமையாக இருப்பதில் மற்றைய கட்சிகள் மகிழ்ச்சியடையவில்லை. இந்த நாட்டில் மீண்டும் பிளவுகள் ஏற்பட நாங்கள் அனுமதிக மாட்டோம், இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதே எங்கள் விருப்பம், அதற்காக நீங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.







