புதிதாக நியமிக்கப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்கள் 19.11.2024 (இன்று) டொரிங்டனில் உள்ள பொது நிர்வாக அமைச்சில் பதவியேற்றார்.
புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டதைப் போன்று நாட்டின் அபிவிருத்திக்காக உழைக்கும் புதிய கலாசாரம் உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அமைச்சு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான பேராசிரியர் சந்தன அபேரத்ன, களனிப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுக் கற்கைகள் பிரிவில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இதன்போது, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். திரு ஆலோக பண்டார மற்றும் அமைச்சின் சிரேஷ்ட ஊழியர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்