நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது சகல நாடுகளிலும் பிரதான இலக்கினைப் போன்று தேவையுமாகும். இலங்கையும் பொருளாதார சமூக மற்றும் கலாசார ரீதியில் முன்னேற்றகரமான அபிவிருத்தி மட்டத்தை எட்டுவதற்காக பயணித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கே முயற்சிக்கின்றது. இச் செயற்பாட்டின் போது பிரதேச மட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் காணப்படும் சமநிலையின்மையினைக் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்பினை வழங்குவதற்கும் நாட்டின் ஜனநாயகச் செயற்பாடுகளை தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கும் சிறந்த சேவைகள் நாட்டில் அமுலிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற முறைமை ஊடாக முடிந்துள்ளது.
இந்நிலைமையில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு பின்னடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதன்மூலம் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கும் தேவையான இயந்திர உபகரணங்களை வழங்குவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விசேடமாக நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் போதியளவு வருமான மட்டம்மின்மையினால் அனேகமான பிரதேச சபைகளுக்கு பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படுவதினால் அவ்வாறான பிரதேச சபைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் அத்தியாவசிப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது முழுஉலகிலும் பெரும்சவாலாக மாற்றம் பெற்றுள்ள திண்மக் கழிவுப்பொருள் முகாமைத்துவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அதற்காகப் பொருத்தமான செயற்பாட்டு முறைமையினை வகுப்பதற்கு இவ் அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படைச் செயற்பாட்டுத் தேவையான இயந்திர உபகணரங்கள் மற்றும் ஏனைய வசதிகளை உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் டெங்கு ஒழிப்பிற்காகத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனம் தொடர்பில் கொள்கைகளை வகுத்து அமுல்படுத்துவது தொடர்பாகவும் பின்னூட்டல் செயற்பாடுகளுக்காக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போது இத்துறையில் எதிர்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, மானிட வள விருத்தி மற்றும் சமூக பொருளாதார ரீதியில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளின் போது சர்வதேச நிறுவனங்கள் ஊடாக வழங்கப்படும் வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்கான பிரதான செயற்பாடுகள் 2016 ஆம் ஆண்டில் வெற்றிகரமான நிறைவேற்ற முடிந்தது.
முன்னேற்றகரமான ஜனநாயக இராட்சியத்தை உருவாக்குவதாயின் அதிசிறந்த உள்ளூராட்சி மன்ற கட்டமைப்பைத் தாபிப்பது அவசியமாகும். இதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவன முறைமையில் காணப்படும் அதிசிறந்த தரத்தைப் போன்று பின்னடைவுகளும் இனங்காணப்பட வேண்டும். உலகின் ஒருசில நாடுகளில் முன்னேற்றகரமான உள்ளூராட்சி மன்றங்களினால் எட்டப்பட்டுள்ள அதிஉயரிய செயற்சாதனைகளை எட்டக்கூடிய செயற்பாடுகள் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்நாட்டு உள்ளூராட்சி மன்ற நிறுவன முறைமையை முழுமையாக சிறந்த மட்டத்தில் முன்னெடுப்பதும் இவ் அமைச்சின் பிரதான நோக்கமாகும்.
அரசாங்கத்தின் நல்லாட்சி மூல அம்சங்களுக்கமைய செயற்பட்டு அவற்றை பாதுகாத்து மற்றும் அபிவிருத்தி செய்து முன்னோக்கிச் செல்லும் மக்களின் பிரதிநிதிகள், அரச ஊழியர்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகிய துறைகளில் முறையாக முகாமைத்துவத்திற்குட்படுத்தி நிருவாகக் கட்டமைப்பின் தேவையைப் போன்று விசேடமாக பிரதேச அபிவிருத்திச் செயற்திட்டங்களைத் திட்டமிடல், வரவு செலவு அமுல்படுத்தல்கள், பின்னூட்டல் மற்றும் பொறுப்புக்கள் ஆகிய பணிகளின் போது சமூகப் பங்கேற்பினை விருத்தி செய்வது தொடர்பில் இவ் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
விசேடமாக உள்ளூராட்சிமன்ற நிறுவனச் சட்டம் தற்போதைக்கு ஏற்றவகையில் சமகாலப்படுத்தல், உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களைக் கூட்டிணைத்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தரத்தை உயர்த்துவதற்காக தேசிய ஒப்பளவு முறைமையினை வகுத்தல், உள்ளுராட்சி மன்ற கோட்ட நிர்னய மேல்முறையீடு விசாரனை குழு மூலம் பொருத்தமானவாறு கோட்ட, எல்லையாயின் பெயர், இலக்கம் அல்லது எழுத்தினை மறுசீரமைத்தல் போன்ற விசேட கொள்கை அடிப்படையிலான விடயங்கள் இவ் அமைச்சின் ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
அத்துடன் புதிய கணணி தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி தற்போது பரிட்சாத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னைய அலுவலக முறைமை சகல உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்தல் மற்றும் தேசிய பொருளாதாரத்தின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் பொறுப்புக் கூற வேண்டிய பணிகளை மேற்கொள்ளும் கட்டமைப்பினை உருவாக்குவதற்காகத் தேவையான கொள்ளளவு விருத்தி பயிற்சி வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல் மற்றும் இயலுமைகள் கொண்ட செயற்திட்டங்களுக்காகத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கும் இலக்குக் கொண்ட வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் அமைச்சின் எதிர்காலத்திட்டத்தின் பிரதான அம்சமாகும்.