நோக்கு

சகலருக்கும் மிகுந்த வசதிகொண்ட சூழல்

நோக்கம்

உள்ளூராட்சி மன்ற அதிகாரப் பிரதேசங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்ளல்.

செயற்பாடுப் பணிகள்

  • உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு முறையான மற்றும் பொருத்தமான திண்மக் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் வகையில் சட்டங்களை வகுத்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.
  • திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான உரிய தொழில்நுட்ப உதவியினை உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்குதல்.
  • திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவங்களை உருவாக்கும் போது உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை ஊக்குவித்தல்.
  • அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்வற்கு உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு உதவுதல்.
  • உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் சூழல் பாதுகாப்பு மத்திய நிலையம் (கொம்போஸ் செயற்திட்டம்) நிர்மாண மற்றும் அபிவிருத்தி செய்தல்.
  • 3R முறைகளை விருத்தி செய்தல்.
  • உள்ளக கழிவு முகாமைத்துவத்திற்காக சேதனப் பசளை பறல்களை விநியோகித்தல்.
  • பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கான கழிவுப் பொதிகளை வழங்குதல்.
  • உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தை விருத்தி செய்வதற்காக கழிவுப் பொருட்களை வேறுபடுத்தி சேகரிக்கும் தேசிய வேலைத்திட்டத்தை அமுல்படுத்தல்.
  • உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கழிவுப் பொருட்களை வேறுபடுத்துவது தொடர்பில் அறிவுறுத்தும் சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு விநியோகித்தல்.
  • இலத்திரணியல் ஊடகங்களைப் பயன்படுத்தி கழிவு முகாமைத்துவம் தொடர்பாக சமூகத்தை அறிவுறுத்தல்.
  • விளம்பரங்களைத் தயாரித்தல்.

அறிவுறுத்தல் வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல்

  • திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்காக சுகாதாரத் தொழிலாளர் உத்தியோகத்தர் களின்இயலுமைகளை விருத்தி செய்யும் பயிற்சி செயலமர்வுகளை நடாத்துதல். (தேசிய தொழிற்பயிற்சிச் சான்றிதழை வழங்குதல் - (National Vocational Qualification - NVQ 4)
  • சேதனப் பசளையினைத் தயாரிக்கும் புதிய செயற்படான தகதுறா முறை தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டங்களை நடாத்துதல்.t
  • பாடசாலை மாணவர்களுக்காக கழிவு முகாமைத்துவம் தொடர்பான அறிவுறுத்தல் வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல்.

விசேட செயற்திட்டங்கள்

  • ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் புத்தெடுச்சி என்ற சூழல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்யும் செயற்திட்டப் பணிகளை மேற்கொள்ளல்.
  • கொழும்பு மாநகர சபையின் கழிவு வெளியேற்றப்படும் மீதொட்டுமுல்ல கழிவுத் தொகுதியில் தொடர்ந்தும் இடவசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அங்கு குடியமர்ந்துள்ளவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைக்கு உதவுதல்.
  • வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவை, கொட்டிகாவத்தை, முல்லேரியா அதிகாரப் பிரதேச எல்லைக்குள் கழிவுப் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல்.

திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்காக வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குதல்

  • 09 மாகாணங்களைத் தழுவக்கூடியவாறு உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்காக வெப்கட் இயந்திரம் சமிக்ஞை ஒலி உபகரணத் தொகுதிகள், கம்பக்ட்டர் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • கழிவுப் பொருள் முகாமைத்துவத்திற்கான மூல உபாயத் திட்டங்கள் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுப்பதற்காக நிபுனத்துவக் குழுவின் ஆலோசனை சபை மற்றும் நிபுணத்துவ குழுவின் ஆலோசனைகளுக்கமைய 09 மாகாணங்களுக்கான கழிவு முகாமைத்துவத்திற்கான திட்டங்களை வகுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.