மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விடயப் பரப்பிற்குள் பிரதான பிரிவாக சட்டப் பிரிவினை அறிமுகப்படுத்த முடியும். உள்ளூராட்சி மன்றங்களுக்குரியதான சட்டங்களை தற்போதைக்கு ஏற்றவாறு சமகால தேவைக்கமைய வகுக்கும்போது முன்னுரிமை வழங்கி செயற்பாடுகள் மேற்கொள்வது அமைச்சின் சட்டப் பிரிவாகும். இவ்வாண்டில் சட்டப் பிரிவின் செயற்சாதனைகளை கீழ் குறிப்பிடப்பட்டவாறு சுருக்கமான குறிப்பிட முடியும்.

  • இதன் பிரதான நோக்கமாக அமைவது மாநகர சபைக் கட்டளைச் சட்டம், நகர சபைக் கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபை கட்டளைச் சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு மறுசீரமைப்பதற்காக யோசனைகளைக் கோரல், அதற்காகப் பொருத்தமான மற்றும் தேவையான அங்கத்தவர்களைக் கொண்ட குழுவை நியமித்து அறிக்கைகளைத் தயாரிக்கும் பணிகள் கடந்த ஆண்டில் இப்பிரிவானால் மேற்கொள்ளப்பட்டது.
  • அத்துடன், உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளில் மகளிர் பிரதிநித்துவத்தைப் பலப்படுத்தும் செயற்பாட்டின்போது தேவையான சட்டங்களை வகுப்பதும் அதனை உறுதிப்படுத்துவதற்காக சட்டப் பிரிவினர் தற்போது அடிப்படைச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இதன் ஆரம்ப நடவடிக்கையாக உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் மகளிர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக உரிய சட்டத்தை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கும்வரை தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதும் மாகாண சபைகளில் மகளிர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக பாராளுமன்றச் சட்டத்தை அங்கீகரிப்பதற்குத் தேவையான சட்ட வரைபினை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதும் உள்ளூராட்சி மன்றம் தொடர்பாக இலங்கை நிறுவனத்துடன் இணைந்து அரசியலில் பெண்களை வலுவூட்டல் என்ற தொனிப்பொருளில் செயலமர்வுகளை ஒழுங்கு செய்வதும் இதன் பிரதான செயலமர்வினை வடமேல் மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கும் 2016 ஆம் ஆண்டில் இப்பிரிவினால் பங்களிப்பு வழங்கப்பட்ட பிரதான பணிகளாகக் குறிப்பிட முடியும்.
  • பொதுச் சுகாதார மற்றும் சூழலுக்குரிய சட்டங்களை வகுப்பதற்கான விசேட பணிகளாக அமைவது கட்டாக்காலி நாய்களினால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மற்றும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் சட்டங்களை வகுக்கும் செயற்பாடுகளின் போது முன்னுரிமையுடன் அதுசார்ந்த பணிகளை மேற்கொள்வதாகும். இதற்கான அடிப்படை செயற்பாட்டு முறைகளை வகுப்பதும் அம்முறைகளை மேற்பார்வை செய்யும் வகையில் குழுவை நியமிப்பதும் சட்டப் பிரிவினால் இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளாக அமைகின்றன.
  • மேலும் பண்புசார் தரம்மிக்க பிரதேச நிருவாகத்தை கட்டியெழுப்புவதற்காகத் தேவையான வழிகாட்டல்களையும் முன்னெடுப்பது இவ் அமைச்சின் பிரதான பணிகளாகும். இதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஒழுக்க விழுமிய முறைமைத் தொகுதியினை வகுக்கும் பணிகள் சட்டப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவ் வரைபு தமிழ் மற்றும் ஆங்கில மொழிக்கு மொழி பெயர்க்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அதனை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்ததன் பின்னர் தேவையான செயற்பாடுகளை அமுல்படுத்த அவ்வவ் மாகாண சபைகளுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன.
  • அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பிரதேச சபைச் சட்டத்தின் விசேட மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கும் தேவையான செயற்பாடுகளை அமுல்படுத்தும் பணிகளும் சட்டப்பிரிவினால் ஏற்கனவே முன்னெடுக்கப் படுகின்றன. அதற்குரியதாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக் கொண்ட வரைபு சட்டமா அதிபரின் உறுதியினைப் பெற்றுக் கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கிடைக்கவேண்டிய தண்டப்பணம் மற்றும் காணி கையளிப்பிற்கமைய அறவிட வேண்டிய ழுத்திரை கட்டணத்தை முறையாக மற்றும் துரிதகதியில் அவ்வவ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு கிடைக்காமை குறிப்பிட்ட காலம் தொடக்கம் உள்ளூரட்சி மன்றங்கள் எதிர்கொள்ளக்கூடிய பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இதற்கமைய அவ் நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரை கட்டணத்தை துரிதகதியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு கிடைக்கச் செய்யத் தேவையான செயற்பாடுகளை வகுக்கும் வகையில் தேவையான சட்டத்தை வகுப்பதற்காக அமைச்சரவை விஞ்ஞாபனத்தை சமர்ப்பிப்பதும் 2016 ஆம் ஆண்டில் இப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட பணிகளாகக் கருத முடியும்.
  • உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களைக் கூட்டிணைப்பதற்காக பொருத்தமான ஒப்பளவுகளை இனங்காண்பதும் எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களை கூட்டிணைத்தல், தரமுயர்த்துவது தொடர்பில் மிகுந்த தூரநோக்கு கொண்ட மற்றும் முறையான செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குகளை முன்னெடுப்பது தொடர்பில் தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கியமையும் 2016 ஆம் ஆண்டில் சட்டப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு பிரதான பணியாகும்.
  • புதிய உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை உருவாக்குவது தொடர்பில் அங்கீரிக்கப்பட்ட முறைகள் அல்லது கொள்கைகள் இன்மையினால் நகர சபை, மாநகர சபைகளை உருவாக்கும் செயற்பாடுகள் முறையாக இடம்பெறாமை இவ் அமைச்சினால மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது. எனவே புதிய உள்ளூராட்சி மன்றங்களைத் தாபித்தல் மற்றும் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களை தரமுயர்த்துவதற்காக தேசிய ஒப்பளவுகளை தீர்மானிக்கும் வகையில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் 2016.05.25 ஆம் திகதி புத்திஜீவிகள் குழு நியமிக்கப்பட்டது.

குழுவின் விடயப்பரப்பு

  • உள்ளூராட்சி மன்ற அதிகாரப் பிரதேசங்களுக்கு சனத்தொகையின் அளவு, பொருளாதார அபிவிருத்தி மட்டம், வருமான ஊக்குவிப்பு. நில முரண்பாடுகள் காணப்படும் நிருவாக எல்லைகள் கொண்ட கோட்ட எல்லையாக ஏனைய உரிய தகவல்களைக் கருத்திற் கொண்டு ஒப்பளவுகளை வகுத்தல்.
  • புதிய உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களை தரமுயர்த்துவது தொடர்பில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள் உட்பட சிவில் அமைப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளல்.

இக்குழு இடைக்கிடையே கூடி உரிய ஒப்பளவுகள் தொடர்பாக கலந்துரையாடி கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை பெறுவதற்காக பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விளம்பரத்திற்கமைய கருத்துக்களும் 1999 உள்ளூராட்சி ஆளுகை தொடர்பான ஜனாதிபதி பரிசோதனை ஆணைக்குழு சபையின் அறிக்கையில் அடங்கும் விடயங்கள் தொடர்பாகவும் நீண்ட நேரம் குழுவினால் கவனம் செலுத்தப்பட்டு இதன்போது கீழ் குறிப்பிடப்பட்ட அடிப்படை ஒப்பளவுகளுக்கிணங்க தீர்மானங்கள் எட்டப்பட்டன.

  • சனத்தொகை மற்றும் சனத்தொகையின் அளவு (ஒரு சதுர கிலோ மீற்றருக்கு அல்லது அதனைவிடக் குறைந்த நிலப்பிரதேசத்திற்கு)
  • வீடுகளின் அளவு மற்றும் அதன் பருமன்
  • சேவை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் முன்னேற்றம் (நீர், வீதி, மின்சாரம், தொலைபேசி, பாடசாலை, வைத்தியசாலை, ஏனைய அரச சேவைகள்)
  • காணப்படும் வர்த்தகக் கட்டடங்களின் எண்ணிக்கை
  • விவசாயமல்லாத பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சனத்தொகை விகிதாசாரம்
  • பிரதேச பொருளாதார கட்டமைப்பு மற்றும் வளப் பயன்பாடு
  • பிரதேச முக்கியத்துவம் (வரலாற்று ரீதியில் / பொருளாதார அல்லது ஏனைய விடயங்கள்)
  • பிரதேச வருமான இயலுமைகள்

இவ் ஒப்பளவுகளைக் கணிப்பீடு செய்வதற்காக கிடைக்கப்பெற்ற முறைகள் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காகத் தேவையான தகவல்களை குடிசனப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன. 2016.12.13 ஆம் திகதியளவில் இவ் ஒப்பளவு முறைமையினை வகுக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அவ் ஒப்பளவுகளுக்கமைய எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களைத் தாபிக்கும் பணிகளை மேற்கொள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கொள்கை அடிப்படையில் தீர்மானங்களை எடுத்துள்ளது.

மாகாண சபை சட்டப்பிரிவைகள்

10/01/2022 திகதிய, இல. 2262/08 உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்புகள்

ஆளுமைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள்

மாநகர சபைகளுக்கான கட்டளைகள் (அத்தியாயம் 252)

நகர சபைகளுக்கான கட்டளைகள் (அத்தியாயம் 255)

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபையின் சட்டம்

சட்டங்கள் மூலம் மாதிரிக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள்

நகர சபை தரநிலை சட்டங்கள்

பிரதேச சபை தரநிலை சட்டங்கள்

உள்ளூராட்சி அதிகார சபைகளின் ஆளுமைச் சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கான அழைப்பு

பத்திரிகை விளம்பரம்

இலங்கையில் உள்ளூராட்சி அதிகார சபையின் அரசியலமைப்பின் மீதான வரையறையை கண்டறிவதற்கான "பரிந்துரைகளுக்கான அழைப்பு

பத்திரிகை விளம்பரம்

The Committee for Reviewing Governing Legislation of Local Government for Legal Reforms has finalized the public hearing. They expect to submit the final report by 31st August 2016.
தொடர்புடைய படங்கள்

A Cabinet Sub Committee has been appointed to examine the Local Authorities Elections Amendment Bill. The first meeting of the committee held on 01/08/2016. The committee decided to appoint a working group to consider the issues raised by political parties and general public related to the new electoral system.
தொடர்புடைய படங்கள்

திடக்கழிவு தொடர்பான சட்டங்கள்

மாநகர சபை

நகர சபை

பிரதேச சபை

பொலன்னறுவை மாநகர சபை மற்றும் பொலன்னறுவை பிரதேச சபையை நிறுவுவதற்கான ஆணை அறிவித்தல்

நாய்களின் பதிவு வரைவு சட்டம்

உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல்கள் 2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க  (திருத்தச்) சட்டம்

மாகாண சபை தேர்தல்கள், 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  (திருத்தச்) சட்டம்

Orders under PRADESHIYA SABHAS ACT, No. 15 OF 1987, CHAPTER 255 of URBAN COUNCILS ORDINANCE and CHAPTER 252 of MUNICIPAL COUNCILS ORDINANCE - Extraordinary Gazette No. 2043/56 - (THURSDAY, NOVEMBER 02, 2017)

(LA ஒவ்வொரு உறுப்பினர்களின் எண்ணிக்கை )

1987ம் ஆண்டு சட்ட இல. 15 பிரதேச சபைகள் கீழமைந்த ஆணைகள் - அசாதாரண வர்த்தமானி இல. 2043/57 - (வியாழன், நவம்பர் 02, 2017) -

(புதிய நுவரெலியா மற்றும் அம்பாகமுவிற்கான உள்ளூர் அதிகாரிகள்)

மாநகர சபைகளின் அலுவலக கட்டளையை ஆரம்பிக்கும் திகதி திருத்தும்படி உத்தரவு, நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் - அசாதாரண வர்த்தமானி இல. 2061/4 - (திங்கள், மார்ச் 05, 2018)

 

උසාවි දඩ මුදල් සහ ඉඩම් පැවරීම මත අයවන මුද්දර ගාස්තු පළාත් පාලන ආයතන වෙත ලැබීම විධිමත් කිරීම හා කඩිනම් කිරීම

පළාත් පාලන ආයතන බල ප්‍රදේශවල උසාවි දඩ මුදල් සහ ඉඩම් පැවරීම් සඳහා ලියා සහතික කරන ඔප්පු මත අයවන මුද්දර ගාස්තු වලින් එකී පළාත් පාලන ආයතනවලට ලැබිය යුතු ආදායම් එම ආයතනවල අරමුදල් වෙත ගෙවනු ලැබිය යුතු බවට විධිවිධාන මහා නගර සභා ආඥා පනත, නගර සභා ආඥා පනත සහ ප්‍රාදේශීය සභා පනතෙහි අන්තර්ගත කර ඇත.

කෙසේ වෙතත් 1978 ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම වව්‍යවස්ථාවේ 13 වන සංශෝධනය ප්‍රකාර පළාත් පාලන ආයතන වෙත ව්‍යවස්ථාපිතව හිමි වී ඇති ආදායම් වන උසාවි දඩ මුදල් ,ඉඩම් වැනි දේපළ පැවරීම සම්බන්ධයෙන් මුද්දර ගාස්තු පළාත් සභා වෙත පැවරුණු විෂයක් ලෙස දක්වා ඇත.

මෙකී උසාවි දඩ මුදල් සහ දේපල පැවරීම සම්බන්ධයෙන් වන මුද්දර ගාස්තු පළාත් පාලන ආයතනවල ප්‍රධාන ආදායම් මාර්ගය වන අතර ඉහත කරුණ හේතුවෙන් එකී ආයතන මුහුණ දෙන දුෂ්කරතාවයන් ඉවත් කරලීම සඳහා අවශ්‍ය නීති කෙටුම්පත් කරන ලද පළාත් සභා (සංශෝධන) පනත් කෙටුම්පත රජයේ ගැසට් පත්‍රයේ පල කිරීමෙන් අනතුරුව ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154උ ව්‍යවස්ථාව ප්‍රකාරව, අතිගරු ජනාධිපතිතුමා විසින් පළාත් සභාවල අදහස් ලබාගැනීම සඳහා යොමු කිරීමට මේ වන වට ජනාධිපති ලේකම් වෙත ඉදිරිපත් කර ඇත. එකී පනත් කෙටුම්පත භාෂාත්‍රයෙන් පහත දක්වා ඇත.

 

උසාවි දඩ මුදල් සහ ඉඩම් පැවරීම මත අයවන මුද්දර ගාස්තු පළාත් පාලන ආයතන වෙත ලැබීම විධිමත් කිරීම හා කඩිනම් කිරීමේ අවශ්‍යතාවය