பிரதேச சபைகளைப் பலப்படுத்தும் தேசிய வேலைத்திட்டங்கள் (மீண்டெழும்)

“பிரதேச சபைப் பராமரிப்புப் பிரிவின் மூலம் சமூக உட்கட்டமைப்பு வசதிகளைப் பராமரிப்பதற்காக சகல பிரதேச சபைகளுக்கும் மாதமொன்றுக்கு ரூபா 1,000,000.00 வீதம் வழங்குதல்".

நோக்கம் போதியளவு வருமான மார்க்கம் இன்மையினால் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்யப்படாதுள்ள பிரதேச சபைகளில் அவ்வசதிகளை விருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் அதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் பண்புசார்தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தல்.
பிரதான செயற்பாடுகள் சமூக உட்கட்டமைப்பு வசதி பராமரிப்பு, பழுது பார்ப்பு மற்றும் புணரமைப்புச் செயற்பாடுகளை மேற்கொள்ளல்
அமுல்படுத்தப்படும் பிரதேச சபை நாட்டின் சகல பிரதேச சபைகளிலும் (271)

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மூலதன வேலைத்திட்டங்கள்

நோக்கம் உள்ளூராட்சி மன்றங்களின் சமூக உட்கட்டமைப்பு வசதிகளைப் புதிதாக நிர்மாணிப்பதற்காகத் தேவையான உதவிகளை வழங்குவதும் அதன் மூலம் உள் ளூ ராட்சி மன்ற நிறுவனங்களிலிருந்து பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளின் பண்புசார்தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தல்.
பிரதான செயற்பாடுகள் உள்ளூராட்சி மன்ற அதிகாரப் பிரதேசங்களின் கால்வாய்த் தொகுதி, குறுக்கு வீதிகள், நாளாந்தச் சந்தை/ வாராந்தச் சந்தை, பொதுமலசலகூட வசதிகள், சமூக நீர்வழங்கல் செயற்திட்டம், சுற்றுலா கவர்ச்சிமிக்க இடங்கள் போன்ற அத்தியாவசிய சமூக உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்.
அமுல்படுத்தப்படும் பிரதேச சபை சகல உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் (335)

நகர மயப்படுத்தலுடன் அதிகரித்துச் செல்லும் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு உள்ளூராட்சி மன்ற நிறுவன அதிகாரப் பிரதேசங்களின் அத்தியாவசிய சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படாமையினைக் காரணமாகக் கொண்டு இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இப்பிரச்சினைக்குத் தீர்வான உள்ளூராட்சி மன்றங்களின் சமூக உட்கட்டமைப்பு வசதிகளைப் புதிதாக நிர்மாணிப்பதற்காகத் தேவையான உதவிகளை வழங்குவதன் மூலம் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் பண்புசார் தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக இவ் வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல்.

இவ் வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படும் செயற்திட்டங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன;

  • வசதிகளுடன் கூடிய மத்திய நிலையங்களை நிர்மாணித்தல்
  • வாய்க்கால் தொகுதி மற்றும் கழிவகற்றல் தொகுதியினை நிர்மாணித்தல்
  • குறுக்கு வீதிகளை அபிவிருத்தி செய்தல்
  • புதிய நீர் வழங்கல் செயற்திட்டங்களை அமுல்படுத்தல்
  • சுற்றுலாக் கவர்ச்சிமிக்க இடங்களை அபிவிருத்தி செய்தல்
  • தற்காலிக ஒளி சமிக்ஞை தொகுதியினைப் பொருத்துதல்
  • நாளாந்த சந்தை / வாராந்த சந்தை நிர்மானிப்பு

கேகாலை மாவட்டத்தில் அனர்த்த இழப்பீடுகள் இடம்பெற்ற உள் ளூ ராட்சி மன்றங்களுக்குத் தேவையான வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ளல்

2016 ஆம் ஆண்டில் மே மாதத்தில் இடம்பெற்ற பலத்த மழை காரணமாக அனர்த்த நிலைக்குட்பட்டு சேதமடைந்த கேகாலை மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைப்பதனை அடிப்படையாகக் கொண்டு கேகாலை மாவட்டத்தின் இணைப்பு குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அனர்த்த இழப்பீடுகள் இடம்பெற்ற உள் ளூ ராட்சி மன்ற நிறுவனத்திற்குரிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக இவ் அமைச்சின் பங்களிப்பினை வழங்க வேண்டி ஏற்பட்டது.

இதன் போது கேகாலை மாவட்டத்தின் இணைப்புக் குழுவினால் இனங்காணப்பட்ட அனர்த்த இழப்பீடுகள் ஏற்பட்ட உள் ளூ ராட்சி மன்ற நிறுவனங்களுக்குரிய வீதி அபிவிருத்திக்காக முன்னுரிமை வழங்கி இவ் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உயர்ந்தபட்ச ஒதுக்கீட்டு அளவினைக் கருத்திற்கொள்ளாது ஒதுக்கீடுகளை வழங்க அமைச்சிரினால் விசேடமாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய ஒக்டோபர் 30ஆம் திகதியளவில் உள் ளூ ராட்சி மன்ற நிறுவனங்களின் 158 வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 91.11 மில்லியன் ரூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற நிறுவனத்திற்குரிய நூலக அபிவிருத்தி வேலைத்திட்டம் - நூலகங்களின் சுய செயற்பாடுகள் (இலத்திரனியல் நூலகம்)

நோக்கம் -
பிரதான செயற்பாடுகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட நூலகங்களுக்காக தேவையான வளங்கள், வன்பொருள், மென்பொருள் மற்றும் பயிற்சிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அமுல்படுத்தப்படும் பிரதேசம் சகல மாவட்டங்கள்
அமுல்படுத்துவதற்கான உதவிகள் இலங்கை திறந்த பல்கலைக்கழகம், வடக்குக் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற சேவைகளை விருத்தி செய்யும் செயற்திட்டம்

நூலக சுயமான செயற்பாடுகள்

2016 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட 20.0 மில்லியன் ரூபா தொடர்ச்சியான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு எஞ்சிய ரூபா. 18.3 மில்லியன் ஒதுக்கீட்டினைப் பயன்படுத்தி நாட்டின் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் நூலகங்களில் தேர்தெடுக்கப்பட்ட 22 நூலகங்களை இலத்திரணியல் நூலகங்களாக மாற்றிமைக்கும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக நூலக சேவை சபை மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகிய துறையின் அனுபவம்மிக்க அரச நிறுவனங்களுடன் கலந்துரையாடும் போது நூலக சுய செயற்பாட்டு முறையின் முக்கியத்தும் விளங்குவதினால் இது தொடர்பில் திறந்த பல்கலைக்கழகங்களைத் தொடர்புபடுத்தி இவ்வேலைத்திட்டங்களை அமுல்படுத்தத் தீர்மானிக்கப் பட்டது. முன்னர் திட்டமிடப்பட்ட இலத்திரணியல் நூலக முறைகள் வெறுமனே கணணி உதிரிப்பாகங்கள், அலுவலகத் தளபாடங்கள், உபகரணங்கள் மற்றும், இறுவெட்டுக்கள் போன்றவற்றை வழங்கும் இலகுவான யோசனையின் அடிப்படையில் இருந்தபோதிலும் நூலகச் செயற்பாடுகளை நவீன தொழில்நுட்பங்களுடன் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கான வேலைத்திட்டங்கள் காரணமாக அதன் உற்பத்தித்திறன் வினளதிறன்...

இதன் கீழ் முழுமையான சுய செயற்பாட்டிற்குட்படுத்தப்பட்ட பொது நூலக எண்ணிக்கை 30 என்பதுடன், மேலும் 10 நூலகங்கள் பகுதியளவில் சுய செயற்பாடுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திறந்த பல்கலைக்கழத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூலகங்கள் தொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் தேவையான கணணிகள் மற்றும் தேவையான உபகணரங்களை கொள்வனவு செய்ய அமைச்சினால் உரிய பெறுகைச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் இவ் வேலைத்திட்டத்திற்குரிய பயிற்சிகள் மற்றும் நிலைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக வடகிழக்கு மாகாண உள்ளுராட்சி சேவையினை விருத்தி செய்யும் செயற்திட்டமான (NELSIP) இனால் நிதிப் பங்களிப்புக்கள் வழங்கப்பட்டன.

பல்லேபொல நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்

நோக்கம் வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன்மிக்க உள்ளூராட்சி மன்ற ஊழியர்களுக்காக பல்லேபொல நகரை மாதிரி நகராக அபிவிருத்தி செய்தல்.
பிரதான செயற்பாடுகள் பல்செயற்பாட்டு கட்டட நிர்மானிப்பு - கட்டம் 2
அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசம் பல்லேபொல பிரதேச சபை - அதிகாரப் பிரதேசம்
அமுல்படுத்துவதற்கான உதவிகள்
  • நகர அபிவிருத்தி அதிகார சபை
  • இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்
  • கட்டடத் திணைக்களம்

பல்லேபொல நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பல்லேபொல வர்த்தகக் கட்டடத் தொகுதி மற்றும் பல்செயற்பாட்டுக் கட்டட நிர்மாணிப்பு (எஞ்சிய பணிகள்) மொத்த நகரத் திட்டமிடலைத் தொடர்புபடுத்தி முறையான திட்டத்துடன் அமுல்படுத்தப்படுகின்றது. துரிதகதியில் நகர மயமாகும் நகரமாக இருந்தபோதிலும் பொதுச்சேவை வசதிகளை வழங்குவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவு  உருவாகாத நிலையில் அவ்வசதிகளைக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தரளவு நகராக அபிவிருத்தி செய்வது பல்லேபொல நகர அபிவிருத்தியின் எதிர்பார்க்கப்பட்ட பிரதான பெறுபேறாகும். இதற்கமைய நகர அலங்காரத்தைப் போன்று ஒரே கூரையின் கீழ் பல்வேறுபட்ட தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய மத்திய நிலையமாக இப் பல்செயற்பாட்டுக் கட்டடத் தொகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.

பல்செயற்பாட்டுக் கட்டடத் தொகுதி நிர்மாணிப்பு கட்டம் 1, 2015 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டதுடன் அதன் இரண்டாவது கட்டம் 2016 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கமைய முதலாவது மற்றும் இரண்டாவது மாடியின் கீழ்ப் பகுதியில் டைல்ஸ் பதித்தல், சிமெந்து பூசுதல், வர்ணம் பூசுதல், கதவு ஜன்னல் பொருத்துதல், சுத்திகரிப்பு வசதிகள், நீர் மற்றும் மின்சார வசதிகளை வழங்குதல் ஆகிய பணிகளும் இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்டன.

வடக்குக் கிழக்கு உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் புதிய அலுவலகக் கட்டடங்களை நிர்மானிக்கும் வேலைத்திட்டங்கள்

நோக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கட்டட வசதிகள் குறைந்த உள் ளூ ராட்சி மன்ற நிறுவனங்களின் அலுவலகக் கட்டடங்களை நிர்மாணிப்பதன் மூலம் இந்நிறுவனங்களினால் பொதுமக்களுக்கு மிகுந்த வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன்மிக்க சேவையினை வழங்குவதற்கான இயலுமையினை வழங்குதல்
பிரதான செயற்பாடுகள் உள்ளூராட்சி மன்றங்களின் புதிய அலுவலக நிர்மாணிப்பு
அமுல்படுத்தப்படும் பிரதேசம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்