அமைச்சின்நோக்கங்களை எட்டுவதற்காக திட்டங்களைத் தயாரித்தல், அதற்குரிய வழிகாட்டல்ஆலோசனைகளை வகுத்தல், அவற்றைஅமுல்படுத்துவதைப் போன்று சமூகபொருளாதாரஅபிவிருத்தியிற்கு பயண்மிக்கதான கொள்கைகள்/ மூலுபாயம்/ திட்டங்கள்/ வேலைத்திட்டங்கள்/ செயற்திட்டங்களை திட்டமிடல், அமுல்படுத்தல், செயற்படுத்தல் மற்றும் மதிப்பீடுகள் அதற்குரிய ஏனைய பணிகளைமுன்னெடுப்பதற்காக இப்பிரிவுதாபிக்கப்பட்டுள்ளது.

பிரதானபணிகள்

  1. அமைச்சின்வருடாந்தசெயற்பாட்டுத் திட்டங்கள்மற்றும் மூலுபாயதிட்டங்களைவகுத்து உரிய நிறுவனங்களுக்கு சமர்ப்பித்தல்.
  2. அரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கைக்கோட்பாட்டிற்கு அமையஎதிர்காலத்திற்குரிய செயற்திட்ட யோசனைகளை இனங்கானுதல் மற்றும் அறிக்கைகளைத் தயாரித்து அவற்றிற்கு அங்கிகாரங்களைப் பெற்றுக்கொள்ளல்.
  3. அபிவிருத்தி செயற்பாட்டின் நோக்கங்கள் மற்றும் அது தொடா்பானஅனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளல்.
  4. அமைச்சின்முன்னேற்ற அறிக்கையை மாதாந்தம், காலாண்டுமற்றும் வருடாந்தம்தயாரித்து உரிய நிறுவனங்களுக்கு சமர்ப்பித்தல்.
  5. அமைச்சின்முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தை நடாத்துதல்.
  6. வருடாந்தசெயற்சாதனை அறிக்கை மற்றும் பாராளுமன்றவரவு செலவுகுழு நிலை விவாதநிகழ்விற்கு செயற்சாதனை மற்றும் எதிா்காலத் திட்டங்கள்உட்பட அறிக்கையினைத் தயாரித்து பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்.
  7. செயலமர்வுகளை ஒழுங்கு செய்தல்மற்றும் நடாத்துதல்.